Monday, April 7, 2025

Higher Reciprocal Tariffs...


"இது ஒரு கடுமையான மற்றும் விரும்பத்தகாத அடியாகும், ஏனெனில் இது நெருங்கிய நண்பர்களிடமிருந்து வருகிறது, ஆனால் நாம் அதிலிருந்து தப்பிப்போம். எங்கள் நட்பும் இந்த சோதனையிலிருந்து தப்பிக்க வேண்டும்,"

-போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்-


ஏப்ரல் 2 ஆம் தேதி ஜனாதிபதி டிரம்பின் சமீபத்திய வரி அறிவிப்பு அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவது கவனிக்கத்தக்கது.
இந்த அறிவிப்பில், ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் இது அமுலுக்கு வரும். எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% அடிப்படை வரி விதிக்கப்பட்டது. கூடுதலாக, ஏப்ரல் 09 ஆம் தேதி முதல் சீன இறக்குமதிகளுக்கு 34% வரி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20% வரி உட்பட அமெரிக்கா அதிக வரிகளை விதித்ததன் மூலம், தனித்தனி "பரஸ்பர வரிகள்"(reciprocal tariffs) அறிவிக்கப்பட்டன.
Trump's higher reciprocal tariff rates என்ற அறிவிப்பின் மூலம் உலக வர்த்தகத்தில் பல தாக்கங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை உலகளாவிய பொருளாதார அமைப்பை மற்றும் சர்வதேச வர்த்தக பரிமாற்றங்களை வெகுவாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிக வரி விதிப்புகளுக்கு எதிராக மற்ற நாடுகளும் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, Trump அறிவித்த higher reciprocal tariffs பிற நாடுகளின் மீதும் அதேபோல் அதிகப்படியான வரிகள் விதிக்க வழிவகுக்கும். இதனால் சர்வதேச வர்த்தகப் போர் (Trade wars) துவங்கலாம்.
உதாரணமாக, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பதிலுக்கு அமெரிக்கப் பொருட்களுக்கு இதேபோன்ற வரிகளை விதிக்கலாம். இது சர்வதேச வர்த்தகத்தை சீர்குலைத்து, முக்கிய வர்த்தக நாடுகளுக்கு இடையே பதட்டங்களை அதிகரிக்கக்கூடும்.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்படுவது வெளிநாட்டு மூலப்பொருட்கள் அல்லது உற்பத்திகளை நம்பியுள்ள அந்நாட்டு நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகளை அதிகரிக்கக்கூடும். இந்த செலவு அதிகரிப்பு நுகர்வோருக்குக் கடத்தப்பட இதனால் அன்றாடப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கும்.
இந்த உயர்வு சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கு (Small and medium-sized businesses) பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம், ஏனென்றால் அவர்களின் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் இதன் விளைவாக இது ஏற்படும்.
உயர் தொழில்நுட்பத் தொழில்கள், குறைந்த விலை விநியோகச் சங்கிலிகள்(Low-cost supply chains) மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் இதனால் பாதிக்கப்படலாம், உலகளாவிய சந்தைகளில் பாரதூரமான இடையூறுகளுக்கு இது வழிவகுக்கும்.
உயர்ந்த வரிகள் அல்லது இறக்குமதி குறைப்பு காரணமாக பொதுவான விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நுகர்வோரின் செலவுகளில் அதிகரிப்பு ஏற்படக்கூடும், இது நாட்டின் உள்ளூர் சந்தைகளையும் கணிசமாக பாதிக்கக் கூடியது.
இந்த tariff increases சர்வதேச உறவுகளில் அதிர்வை ஏற்படுத்தலாம். சில நாடுகள், குறிப்பாக வர்த்தகத்தின் முக்கிய பங்காளிகள், புதிய வர்த்தக ஒப்பந்தங்களை அல்லது புதிய இணக்கப்பாடுகளை தேடவேண்டி ஏற்படும், அத்துடன் வர்த்தக உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மேலும் விரிவாக்கப்பட்ட வரி விகிதங்கள் சர்வதேச பங்குச் சந்தைகளில் கணிசமான அதிர்வை உண்டாக்கக்கூடும். அதுமட்டுமன்றி,இந்த புதிய வரி விகிதங்கள் சிறிய அல்லது நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான மூலதன திறன்களை சீர்குலைக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளவும், உலகளாவிய பொருளாதாரத்தில் போட்டியிடவும் மிகவும் சிரமப்பட வாய்ப்புண்டு.
சர்வதேச வர்த்தகத் தடைகள் (Tariffs) அதிகரிப்பதால், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது. குறிப்பாக, சர்வதேச வர்த்தகம் என்பது சராசரி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கக்கூடியது.
சர்வதேச வர்த்தகம் ஒரு நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியை பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இது பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சில முக்கிய காரணிகள் ஊடாக நாம் பார்க்க முடியும்.
01.பொருளாதார விரிவாக்கம்(Economic Expansion):
சர்வதேச வர்த்தகம் புதிய சந்தைகளுக்கான அணுகலை வழங்குகிறது, இது ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவுகிறது. இது அதிக உற்பத்தி மற்றும் வர்த்தகம் மூலம் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
02.அறிவு சார்ந்த பொருளாதாரம் (Knowledge-Based Economy):
சர்வதேச வர்த்தகத்தின் மூலம், ஒரு நாடு அதன் உற்பத்தி திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியலில் முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவது உற்பத்தி முறைகளை மேம்படுத்த உதவுகிறது, பொருளாதார வளர்ச்சிக்கு இது பங்களிக்கிறது.
03.பணவீக்கக் கட்டுப்பாடு (Inflation Control):
சர்வதேச வர்த்தகத்திலிருந்து அதிகரித்த போட்டி, மிகவும் மலிவு விலையில் பொருட்களை சந்தைக்கு வழங்குவதன் மூலம் விலைகளைக் குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக உள்நாட்டு சந்தைகளில் குறைந்த விலைகள் ஏற்படுகின்றன, இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
தொழில்துறை கண்டுபிடிப்பு(Industrial Innovation):
சர்வதேச வர்த்தகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் போட்டியையும், ஒத்துழைப்பை வளர்க்கிறது, தொழில்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கையின் வளர்ச்சியை இது தூண்டுவதுடன், நாட்டிற்கு புதிய சந்தைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளுக்கான கதவினை திறக்க உதவுகின்றது.
மனித மூலதன மேம்பாடு (Human Capital Development):
சர்வதேச வர்த்தகம் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, இதன் மூலம் மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இது தொழிலாளர்களிடையே திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது.
இவ்வாறு, சர்வதேச வர்த்தகம் புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதன் ஊடாக ஒரு நாட்டின் சராசரி வளர்ச்சியைக் கணிசமாக பாதிக்கிறது என்பதை இவற்றின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடிவகின்றது. ஆனால், ஜனாதிபதி டிரம்பின் இந்த வகை நடவடிக்கைகள், மிகவும் பரஸ்பர வரி விதிப்புகளை நாடுகளுக்கிடையே உருவாக்குகின்றன, அதன் மூலம் வர்த்தக அமைப்புகளை மேம்படுத்துவதை விட, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கே இந்த நடவடிக்கை வழிவகுக்கின்றது.
"Worst offenders" நாடுகளுக்கு எதிராக அதிகரித்த வரிகள், அமெரிக்காவின் பொருளாதார நிலைப்பாட்டை பாதுகாக்கும் முயற்சியாக இருந்தாலும், சர்வதேச வர்த்தக அமைப்புகளின் சமநிலையை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி டிரம்பின் சமீபத்திய வரி அறிவிப்பு சர்வதேச வர்த்தகத்தில் எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
"The European Union? They think they're so smart with their fancy cheeses and wines, but when it comes to trade, they’re just as bad as China. Time to put some tariffs on that French brie."
Trump jokes about the EU’s tariffs while poking fun at European luxuries, using humor to underline his tough stance on tariffs.
நா.இராஜமனோகரன்
04/04/2025

No comments:

Post a Comment