Monday, April 7, 2025

Ghibli...! Ghibli...!எங்கும்...Ghibli.

"I think I’m just making films for myself, trying to do things I like. What I want to do most is to create something that will bring a smile to a child’s face."

— Hayao Miyazaki-
இன்று, இளையோர் மத்தியிலும் சமூக வலைகளிலும் பேசு பொருளானதே இந்த ஜிப்லி (Ghibli) தான்.
ஏன் Ghibli என்ற பெயர் திடீர் எழுச்சி பெற்றது?! தூண்டிய காரணி எது?
சுமார் 40 ஆண்டு காலமாக இருந்து வரும் இந்த ஜிப்லி முறை தற்போது திடீரென ஏன் பிரபலமாகக் காரணம், இந்த Chat GPT (Generative Pre-trained Transformer) தான்.
Chat GPT மென்பொருளில் புதிதாக ஒரு மேம்படுத்தல் (gpt-4o) கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஒரு பயன் நுகருநர் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து அதனை animation பாணியில் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்பதே அது.
இந்த புது மேம்பாட்டால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால், அதன் செயல்பாட்டில் உள்ள எளிமையும், பயன் நுகருநர்களுக்கு வசதியான அணுகல் தன்மையையும் அளித்தமையே!
இதன் காரணமாக, இவ்வளவு விரைவாக பிரபலமானது தான் இந்த 'Gholbli' .
இளையோர் தொட்டு பிரபலங்கள் வரை இந்த மென்பொருளை பயன்படுத்தி தமது படங்களை Gholbli முறையில் மாற்றி பதிவேற்ற... இது பிரபலமானது...
அதனால் பேசு பொருளானது.
இந்த ஜிப்லி பற்றி ஒரு சிறு அறிமுகம்....
"ஜிப்லி" (Ghibli) என்பது மிகவும் பிரபலமான animation கலையகம் ஆகும்.
'Studio Ghibli என்பதே அதன் பெயராகும். இது உலகளாவிய அளவில் பெரும் புகழ் பெற்ற நிறுவனம், அதன் animation படங்கள் மிகுந்த பாராட்டைப் பெற்றவை.
1985 இல் ஹயாோ மியாசாகி (Hayao Miyazaki) மற்றும் இசாவாகா ( Isao Takahata) ஆகியவர்கள் நிறுவியது தான் இந்த கலையகம்.
இது June 15, 1985ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கலையகம் பல animation திரைப்படங்களை தயாரித்து, உலகளாவிய அளவில் பிரபலமானது.
Ghibli படங்கள் மிகவும் அழகான கலை வடிவமைப்புகளுக்கு பிரபலமானவை. அதன் Cartoon மற்றும் animation வடிவங்கள் மிகவும் மென்மையானவையும், அழகியவையாகவும் இருக்கின்றன.
Ghibli படங்களில் பிரபலமான காட்சிகள், கிராபிக்ஸ், நகரங்கள், இயற்கையான காட்சிகள் என்பன அழகான வண்ணங்களால் மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Studio Ghibli, தனது படங்களில் வழக்கமாக அழகான, அதே சமயம் கண்ணியமான கதைகளை பார்வையாளருக்கு வழங்கி வருகின்றது.
இவை, இன்பம், துன்பம், மனிதாபிமானம், இயற்கை சக்திகள் மற்றும் சமூக நிலைமைகள ஆராய்கின்றன.
மியாசாகி படங்களில் பலத்த உணர்ச்சிகள் மற்றும் சமூகப் பார்வைகள் பிரதானமாக இருக்கும். உதாரணமாக, "Spirited Away" படம் மனதை தொடும் வகையில் அழகான அனுபவத்தை எமக்கு அளிக்கிறது.
Ghibli படங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் மிகவும் படைப்பாற்றல் மற்றும் கலைக்கான புதிய சிந்தனைகளையும் பார்வையாளருக்கு வழங்குகின்றன.
"Howl's Moving Castle" மற்றும் "Princess Mononoke" போன்ற படங்களில், அவர்கள் இயற்கையின் அழிவையும், மனித மனத்தின் திருப்பங்களையும் நுட்பமாக எடுத்துரைத்துள்ளனர் என்பது பயன் நுகருநர்களின் கருத்து.
Studio Ghibli, அதன் படங்களின் மூலம் உலகளாவிய அளவில் முக்கியமான கலாசார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள பாரம்பரிய மற்றும் சமூக நிலைகளின் பார்வையில், Ghibli படங்கள் தன்னுடைய பிரதான நோக்கத்தை, அழகிய மற்றும் நுட்பமான கலையூடாக உணர்த்துகின்றது.
இந்த animation படங்கள், அதிகமான இடங்களில், குறிப்பாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமானவை.
Ghibli படங்கள் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாகவும், சிந்தனை தூண்டும், கலைப் படைப்புகளாகவும் காணப்படுகின்றமையே அதன் சிறப்பு.
நா.இராஜமனோகரன்
31 March 2025
கொசுறு:
GPT-4o ("o" என்பது "omni" என்பதைக் குறிக்கிறது) என்பது OpenAI நிறுவனத்தால் மே 2024-ல் வெளியிடப்பட்ட ஒரு பல்மாதிரி (multimodal) செயற்கை நுண்ணறிவு மாதிரி ஆகும்.
இது உரை,ஒலி, படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளீடுகளாக ஏற்றுக்கொண்டு, உரை, ஒலி மற்றும் படங்களை வெளியீடுகளாக உருவாகுகின்றது.
ஆயினும், இதில் தவறுகளும், சுற்றுச்சூழல் சவால்களும் ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments:

Post a Comment