Thursday, June 9, 2022

இந்தியாவில் காட்சிகளுக்கான அங்கிகாரம்...

இந்தியா சுதந்திரம் அடைந்து 2022ம் ஆண்டுடன் 75வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது. இந்தியா பல கட்சிமுறை கொண்ட நாடு.இங்கு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு விதமானவை.
1.தேசியக் கட்சி
2.மாநிலக் கட்சி

மாநிலக் கட்சியாக அங்கிகாரம் பெறவேண்டுமாயின் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அ)
  01.தொடர்ந்து ஐந்து வருடங்கள் அரசியல் செயற்பாடு.
  
  02.மக்கள் பிரதிநிதிகள் அவையில் ஒவ்வொரு 25 உறுப்பினர்களுக்கும் ஒரு உறுப்பினர் என்ற             விகிதத்தில் உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

 03.சட்டப் பேரவையில் ஒவ்வொரு 30  உறுப்பினர்களுக்கும் ஒரு   உறுப்பினர் என்ற  விகிதத்தில்          உறுப்பினர் இருக்க வேண்டும்.

ஆ)
  
01.சட்டப்பேரவைக்கு    நடைபெற்ற  தேர்தலில்   மொத்தம் பதிவான  வாக்குகளில்,                                 செல்லுபடியாகும்   வாக்குகளில்  நான்கு சதவீதமானது   வேட்பாளர் பெற்றிருக்கவேண்டும்.
     
  02.ஒரு தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சியின் வேட்பாளருக்கு அத்தொகுதியில் பதிவான
       வாக்குகளில் செல்லத்தக்க வாக்குகளில் 1/12 பங்கு  கிடைக்கவில்லையெனில்  அந்த                       வாக்குகள்  கணக்கில்   எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
  
  03.தேர்தலில் வென்ற     வேட்பாளர்   தேர்தலுக்கு பின் வேறொரு கட்சியில்   சேர்ந்தால்                           அவ்வுறுப்பினர்  பெற்ற  வாக்குகள்   கணக்கில்    சேர்க்கப்படுவதில்லை.

மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கொண்டுள்ள கட்சி நான்கு மாநிலங்களில் அங்கிகாரத்திற்கு தகுதி பெறுமாயின் அது "தேசியக்கட்சி"யாக அங்கிகரிக்கப்படும். 

நா.இராஜமனோகரன்
09 ஜூன் 2022