Thursday, September 26, 2019

தரணியில் தீப மானாய்!



வீணரை எதிர்த்து நின்று
    விடுதலை தீயில் வெந்து
ஆண்டுகள் ஒன்றை சென்ற
    ஆருயிர் தமிழே திலீபா!

தமிழ் தந்தான் வீதியிலே
    தமிழுக்காய் உயிர் தந்தாய்
உனை இழந்த இந்நாளில்
    உயிர் தமிழ்கள் கதறுதடா!

உரிமையை கோட்டையில் பேசி
    உணர்ச்சியாய் உரும்பிராயில் பேசி
நல்லூரில் நா நடுங்கபேசி
    நாமழ நீ பிரிந்தாயே!

அயல் நாட்டான் தலையீட்டால்
    அருந்தமிழே உனை இழந்தோம்
இதயம் வெடிக்கு  மிந்த
    இந்நாழும் நன் நாளோ!

ஓலக்கம் மீத மர்ந்து
    ஒப்பந்தம் நரிகள் செய்து
அடிமைக  ளாக்க எண்ண
     அகிம்சையில் போர் தொடுத்தாய்!

காந்தியின் தேசம் என்றார்
     காத்திடும் அகிம்சை என்றார்
உணவுநீர் ஒறுத்த உந்தன்
     உணர்வினை மதித்தா ரில்லை!

ஏற்றிய மெழுகாய் நீயும்
    எரிந்து நீ உருகிப்போனாய்
தமிழரின் உரிமை காக்க
    தரணியில் தீப மானாய்!

குறிப்பு :- திலீபனின் முதலாமாண்டு அன்று 'திலீபம்'இதழில் வந்த எனது கவிதை.இறுதி பகுதி மட்டும் நினைவில் இல்லாததால் மாற்றம் செய்துள்ளேன்.1991ல் உதயன் பத்திரிகையில் மீள்பிரசுரமானது.


Friday, August 30, 2019

இன்சுலின் என்றால் என்ன? What is insulin?


இன்சுலின் என்றால்... 


இன்சுலின் பானை


இரத்த சீனி மற்றும் ஆற்றல் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஒரு முக்கியமான ஹார்மோன் ஆகும்.

இன்சுலின் என்பது ஒரு ரசாயன தூதர், இது செல்கள் இரத்தத்திலிருந்து குளுக்கோஸ் என்ற சீனியை  உறிஞ்ச அனுமதிக்கிறது.

கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் உள்ள ஒரு உறுப்பு ஆகும், இது உடலில் இன்சுலின் முக்கிய மூலமாகும்.

குளுக்கோஸின் அளவு அதிகமாக இருப்பதால், இரத்தத்தில் சீனியின் அளவை சமப்படுத்த  இன்சுலின் அதிக உற்பத்திக்கு செல்கிறது.

இன்சுலின் ஆற்றலுக்கான கொழுப்புகள் அல்லது புரதங்களை உடைக்க உதவுகிறது.

இன்சுலின் ஒரு நுட்பமான சமநிலையாக்கி, இரத்தத்தில் சீனி மற்றும் உடலில் பல செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இன்சுலின் அளவு மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அதிகப்படியான அல்லது குறைந்த இரத்த சீனி அறிகுறிகளை ஏற்படுத்தத் தொடங்கும். குறைந்த  அல்லது அதிக  இரத்தத்தில் சீனி நிலை தொடர்ந்தால், கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கும்.

Thursday, August 29, 2019

இன்சுலின் பிறந்த கதை

படத்தில் நீங்கள் பார்ப்பது  நீரிழிவு (Diabetes) எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்

இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற வாழ்க்கை
ஆம்… அந்த உயிர்காக்கும் அமிர்தம் இன்சுலின் தான். நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது.
Dr. பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர், அறிவியல் ஆராய்ச்சியில் பண்டித்தியம் கிடையாது. கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது. அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார்.
“கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது, அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை.
இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது, அந்த ஒரு யோசனைதான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.
நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார்.
banting and best
மருத்துவர் பாண்டிங் (கண்ணாடி அணிந்திருப்பவர்) மற்றும் பெஸ்ட்.
இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார். அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும், துணைக்கு Dr. பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார்.
பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர். அதை கணையம் முழுவதும் நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர்.
அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர். பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர்.
அந்த உயிர் காக்கும் திரவம் தான் “இன்சுலின்” இந்த கண்டுபிடிப்புக்காக 1923-க்கான நோபல் பரிசு Dr. பாண்டிங் மற்றும் Dr. மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது.
இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார். வரலாற்றில் நிலைத்தார்…
Understanding how a man's selflessness can change the world.