இணையத்தில் பூஜா
நடனம் பாடலை தேடிய போது இப்பாடல் கிடைக்கவில்லை
ஆர்வலர்கள் பயன் பெற “பூஜா
நடனம்”என்ற வீரமணி ஐயாவின் பாடலைப்
பதிவிடுகிறேன்.
பூஜா நடனம் - Pooja Dance
இராகம்:
பிருந்தாவன சாரங்கா
தாளம்:
ஆதி, திஸ்ர நடை
இயற்றி
இசை அமைத்தவர்: பிரம்மஸ்ரீவீரமணி ஐயர் (இணுவில், யாழ்ப்பாணம்)
கல்வித்
தெய்வம் அவள் தானடி தோழி
நல்வித்தை
யாவும் தருவாளடி
பல்விதமாக
நாம் பாடுவோம் வாணியின்
பாதம் பணிந்திடுவோம் வாருங்கடி
கல்வித் தெய்வம் அவள் தானடி
தோழி…!
வெண் டாமரை
தனில்
வீற்றிருப்பாளடி
வீ ணா கானம் செய்வாளடி
கொண்டாடிப் பாடுவோம்
தண்டாமரைப் பாதம்
கண்டு ஆனந்தம் கொண்டாடுங்கடி
கல்வித் தெய்வம் அவள்
தானடி தோழி…!
தீபங்கள்
ஏற்றிடுவோம் ஆராத்தி செய்திடுவோம்
தீந்தமிழ்
வாணிபுகழ் பாடிடுவோம்
பாவங்கள்
தீர்ப்பாளடி வேதங்கள் போற்றுமடி
கீதம் இசைக்க வருவாளடி
கல்வித் தெய்வம் அவள் தானடி
தோழி…!
பதிவிற்கு நன்றிகள்.
ReplyDeleteதேவி சரஸ்வதியின் தேமலர் சேவடியை
ReplyDeleteபாமலர் நிதம் சூடி பாடிடுவோம்
நாவில் உறைவாளடி நல் வாக்கு சொல்வாளடி
வாணி கலை மகளை வாழ்த்துங்கடி.
இதனையும் சேர்க்கலாமா இதுவும் அதன் தொடர்ச்சியே.
மிக்க நன்றி
Delete