Friday, May 17, 2013

தட்டுவம்




பூநகரி பிரதேசத்தில்  பாரம்பரியமுறையில் 
உணவு பரிமாறப்படும் பனை ஒலையால் 
இழைக்கப்பட்ட கலசமே "தட்டுவம்"ஆகும். 
இது பார்பதற்கு "பிளா"போன்று காணப்பட்டாலும்,
கை பிடிப்பதற்கான வால் போன்ற பகுதி காணப்படவில்லை.
இத் தன்மையே தட்டுவத்தையும்,பிளாவையும் 
வேறு படுத்தும் அம்சமாகும்.

பூநகரி பிரதேசம் எங்கு உள்ளது என நோக்கின்...
இப்பிரிவு 439 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது
பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். 
யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், 


மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. 
இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 


கௌதாரிமுனை

Saturday, May 11, 2013

இறைவா! தொலைகாட்சியின் இடத்தை நான் பிடிக்கவேண்டும்...!

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். 

தலைப்பு கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்! 

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்.
அதை கண்ட அவர் கணவர் என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்றார்.

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை 
படித்து பாருங்கள் என்று கொடுத்தார் அதில், 

கடவுளே என்னை என் வீட்டில் இருக்கும் 
தொலைக்காட்சியை போல் ஆக்கிவிடு. 

நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.
அதை போல் வாழ வேண்டும் 
எனக்கான இடம், என்னை சுற்றி 
எப்பொழுதும் என் குடும்பத்தினர் 
நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய 
பேச்சை கவனமாக கேட்க வேண்டும்,
அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.

தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு 
கவனத்தை போல் நானும் பெற வேண்டும்.
அப்பா வேலை முடித்து வந்ததும் 
என்னுடன் விளையாட வேண்டும்,
அவர் களைப்பாக இருந்தால் கூட

அப்புறம்,அம்மா கவலையாக இருந்தாலும் என்னை 
விரும்பவேண்டும் என்னை விலக்க கூடாது. 
என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும், சண்டையிடவேண்டும்,என் குடும்பத்தினர் அனைவரும் 
என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். 

கடைசியாக ஒன்று நான் என் குடும்பத்தினர் அனைவரையும் 
எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்.என் இறைவா !
நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை.
நான் தொலைக்காட்சியை போல் வாழ வேண்டும் 
அவ்வளவுதான். 

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

அந்த குழந்தை பாவம்!
என்ன பெற்றோர் இவர்கள் 
குழந்தையை கவனிக்காமல் என்ன ஜென்மமோ? 

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார் 

இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்! 

பெற்றோர்களே தொலைக்காட்சிக்கு 

அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் குடும்ப உறவுகளை 
தூரமாக்கி விடாதீர்கள். 

தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகள் கூட 

குழந்தைகளிடம் எதிமறையான விளைவுகளை 

ஏற்படுத்த கூடியவைகளாகவே பெரும்பாலும் இப்பொழுது உள்ளன. 



எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பழக்கபடுத்திகொள்ளுங்கள்.



Tuesday, May 7, 2013

நாடுகளின் பழைய மற்றும் புதிய பெயர்கள்:




1.டச்சு கயானா — சுரினாம்.
2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா — எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் — கானா
5.பசுட்டோலாந்து — லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா
7.வட ரொடீஷியா — ஜாம்பியா
8.தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் — ஐவரி கோஸ்ட்
11.சாயிர் — காங்கோ
13.சோவியத்யூனியன் — ரஷ்யா
14.பர்மா — மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் — பங்க்களாதேஷ்
16.சிலோன் — ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா — கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்
19.மெஸமடோமியா — ஈராக்
20.சயாம் — தாய்லாந்து
21.பார்மோஸ — தைவான்
22.ஹாலந்து — நெதர்லாந்து
23.மலாவாய் — நியூசிலாந்து
24.மலகாஸி — மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் — இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்

Monday, May 6, 2013

மகனே!,உறவுகள் இதுதானென்று! நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!



வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.


பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு 
சலனமின்றி நீ !
வெளியேறிய போது, முன்பு 
நானும் இது போல் உன்னை வகுப்பறையில்

விட்டு விட்டு என் முதுகுக்குப் 
பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி 

புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் 
எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை 

தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட 

அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி 
எதுவென்றே ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் 

என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் 

என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் 

அனுப்பி வைப்பதற்காக 
மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்

உன்னைப் பார்க்க வேண்டும் என்ற 
ஆவல் இருந்தாலும் படிப்பை 

நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் 
எதிர்வினையே 
இதுவென்று இப்போது 

அறிகிறேன்!

இளம் வயதினில் நீ 

சிறுகச் சிறுக 
சேமித்த அனுபவத்தை 

என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே செலவு 
செய்கிறாய் ஆயினும்… 

உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!