Monday, June 21, 2021

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 

 ஒரு   சிறு விளக்கம்!



அமெரிக்க ஜனாதிபதியை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை என்னால் முடிந்தளவு இலகுவாக விளக்க முயற்சிக்கிறேன்.

உலகில் தேர்தல் முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுபது போல அமெரிக்க தேர்தல் முறையும் வேறுபடுகின்றது. இதில் தேர்தல் கல்லூரி(Electoral College) என்ற சொற்பதம் தான் சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்துவது.

நாம் இங்கு தேர்தல் வாக்குகளின்(Electoral Votes) தன்மை எவ்வாறு அமைகின்றது எனப் பார்ப்போம்,

       Representatives                  435
       Senators(50×2)                   100
       Federal District columbia.  03 (23வது அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் முக்கியமான விடயங்களை கையாளும் பகுதியாதலால் தேர்தல் கல்லூரியில் 03 ஆசனங்கள் வழங்கப்பட்டது)
மொத்தமாக 538 Electoral Votesக் கொண்டதாக காணப்படுகின்றது.

இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் தேர்வாளர்கள் அமெரிக்க மாகாண அளவில் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றனர்.இந்த கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதுடன், சனத்தொகை மாற்றத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை கூடிக்குறையலாம்.

இங்கு,அமெரிக்க தேர்தல் கல்லூரி(Electoral College) முறை அதன் வரலாற்று வேர்களுக்கூடாக உருப்பெறுகிறது, ஏனெனில் இது பொதுவாக மக்களின் வாக்குகளை மறைமுகமாக பிரதிபலிக்கிறது.

அதுமட்டுமன்றி சிறிய மாநிலங்களுக்கும் அதிக வலுவை அது கொடுக்கிற நடைமுறையை காணக் கூடியதாக உள்ளது.இதன் மூலம் சிறிய மாநிலங்களுக்கும் அரசியலமைப்பினூடாக அதற்குரிய மதிப்புகளை வழங்கி மற்றைய மாநிலங்களுடன் சிறிய மாநிலங்களையும் சமன் செய்கிறது.

உதாரணமாக, மிகப்பெரிய மாநிலமான Californiaவில் அமெரிக்க மக்கள் தொகையில் 12.03% மக்கள் உள்ளனர், ஆனால் அதற்கு 55 தேர்தல் கல்லூரி வாக்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தல் கல்லூரி மொத்தத்தில் 10.22% மட்டுமே.

குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான Wyoming அமெரிக்க மக்கள் தொகையில் 0.18% கொண்டுள்ள போதும்  தேர்தல் கல்லூரியில் அதன் மூன்று இடங்களுக்கும் கல்லூரி வாக்குகளில் 0.56% வாக்குகளை வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

தேர்தல் கல்லூரி முறை என்பது ஒரு வேட்பாளர் நாடு முழுவதும் இருந்து தனக்குரிய வாக்குகளைப் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு தேர்தல் கல்லூரிகளின் வாக்குகளே அமெரிக்க ஜனாதிபதியை தீர்மானிக்கும்.

இதற்கு தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 மேல் ஒரு வேட்பாளர் பெறவேண்டியது அவசியமாகின்றது.

உதாரணமாக Texasஐ  எடுத்துக்கொண்டால் மக்கள் தொகை 28,995,881.Texas ஒதுக்கப்பட்ட தேர்தல் கல்லூரி வாக்குக்கள்(Electoral Votes)36 மற்றும் மேலவை உறுப்பினர் வாக்குகள்(Senators Votes)02 மொத்த வாக்குகள் 38.இங்கு,ஒரு தேர்தல் கல்லூரி வாக்காளர் ஏறத்தாள 664,000 மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

South Dakota ஐ எடுத்துக்கொண்டால் அதன் மக்கள் தொகை  884,659.அதற்கான தேர்தல் கல்லூரி வாக்கு 01 மற்றும் மேலவை உறுப்பினர் வாக்கு 02.இவ் மாநிலத்தின் மொத்த மக்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் பிரதிநிதிகள் மூன்று.இங்கு ஒரு பிரதிநிதி 294,800 மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

மேலும்,அமெரிக்காவில் தேர்தல் கல்லூரியால் அதிகளவு ஒதுக்கப்பட்ட  ஆசனங்களைக் கொண்ட மாநிலங்களாக
01.California-53+2=55
02.Texas-36+2=38
03.Florida-27+2=29
04.New York-27+2=29
05.Illinois-18+2=20
06.Pennsylvania-18+2=20
07.Ohio-16+2=18
08.Georgia-14+2=16
09.Michigan-14+2=16
10.North Carolina-13+2=15
11.New Jersey-12+2=14
12.Virginia-11+2=13
13.Washington-10+2=12 ஆகியவை காணப்படுகின்றன.

அதிக ஆசனங்களைக் கொண்ட மாநிலங்கள் முதல் பத்தையும் குறிவைத்து ஒரு அதிபர் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களை கவர்ந்தால் இலகுவாக வெற்றிக் கனியை பறித்து விடலாம். ஏனெனில் ஒரு மாநிலத்தின் தேர்தல் கல்லூரியால் ஒதுக்கப்பட்ட ஆசனங்களைப் பெற பொதுமக்களின் வாக்கில் 50.1%மேற்பட்ட வாக்குகளை அக்கட்சி வேட்பாளர் பெற்றால் போதும்.

உதாரணமாக 2020 தேர்தலில் Democrats கட்சியை சேர்ந்த  Joe Biden அவர்கள் Michiganல் 50.6%[2,788,425] Public votes பெற்றுள்ள அதே வேளை Republican party சேர்ந்த Trump அவர்கள் 47.9%[2,639,037] Public votes பெற்று பின் தள்ளப்பட்ட நிலையில் அதிக Public votes பெற்ற Joe Bidenக்கு Michiganன் electoral votes 16ம் வழங்கப்படும்.

எனவே ஜனாதிபதி வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தனக்கு அதிக வாக்கு வங்கியுள்ள மாநிலத்திலோ அல்லது வாக்கு வங்கி மிகக் குறைந்த இடத்திலோ மேற்கொள்ள மாட்டார்.அது அவருக்கு பிரயோசனம் அற்றது.ஏனெனில் 99% வாக்கைப் பெறுவதும் 50.1%பெறுவதும் ஒன்று தான்.எனவே, அவ்வாறான பிரதேசங்களில் பிரச்சாரம் செய்வது எந்த மாற்றத்தையும் தராது.எனவே அவர்களின் பிரச்சாரம் எல்லாம் இரு பிரதான கட்சிக்கும் போட்டியுள்ள இடங்களிலேயே இடம் பெறும்.

பொதுவாக மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் முதல் 10ல் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் வேட்பாளர் அமெரிக்க ஜனாதிபதியாவர்.ஏனெனில் அதன் மொத்த Electoral Votes 270 ஆகும்.

எனவே,அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றி என்பது அதிக தேர்தல் கல்லூரி பிரதிநிதிகளைக் கொண்ட மானிலங்களில்  பொது மக்கள் வாக்கை 50%மேல் தனது பக்கம் திரும்பும் வேட்பாளருக்கே உரியதாக அமையும்.

நா.இராஜமனோகரன்
05 November 2020.

No comments:

Post a Comment