Thursday, September 26, 2019

தரணியில் தீப மானாய்!



வீணரை எதிர்த்து நின்று
    விடுதலை தீயில் வெந்து
ஆண்டுகள் ஒன்றை சென்ற
    ஆருயிர் தமிழே திலீபா!

தமிழ் தந்தான் வீதியிலே
    தமிழுக்காய் உயிர் தந்தாய்
உனை இழந்த இந்நாளில்
    உயிர் தமிழ்கள் கதறுதடா!

உரிமையை கோட்டையில் பேசி
    உணர்ச்சியாய் உரும்பிராயில் பேசி
நல்லூரில் நா நடுங்கபேசி
    நாமழ நீ பிரிந்தாயே!

அயல் நாட்டான் தலையீட்டால்
    அருந்தமிழே உனை இழந்தோம்
இதயம் வெடிக்கு  மிந்த
    இந்நாழும் நன் நாளோ!

ஓலக்கம் மீத மர்ந்து
    ஒப்பந்தம் நரிகள் செய்து
அடிமைக  ளாக்க எண்ண
     அகிம்சையில் போர் தொடுத்தாய்!

காந்தியின் தேசம் என்றார்
     காத்திடும் அகிம்சை என்றார்
உணவுநீர் ஒறுத்த உந்தன்
     உணர்வினை மதித்தா ரில்லை!

ஏற்றிய மெழுகாய் நீயும்
    எரிந்து நீ உருகிப்போனாய்
தமிழரின் உரிமை காக்க
    தரணியில் தீப மானாய்!

குறிப்பு :- திலீபனின் முதலாமாண்டு அன்று 'திலீபம்'இதழில் வந்த எனது கவிதை.இறுதி பகுதி மட்டும் நினைவில் இல்லாததால் மாற்றம் செய்துள்ளேன்.1991ல் உதயன் பத்திரிகையில் மீள்பிரசுரமானது.


No comments:

Post a Comment