Friday, April 26, 2013

ஆணைத்தான் முதலில் படைத்தேன் என்று நீ அவனை நம்ப வைக்க வேண்டும் ஏவாள் !

ஈடன் தோட்டத்தில் இருந்த ஏவாள், "தேவனே, எனக்கு ஒரு பிரச்னை, கேட்பீரா?" என்றாள்.

தேவன், "உனக்கு என்ன பிரச்னை ? சொல் ஏவாள்" என்று கேட்டார்.

"இந்த அழகிய தோட்டத்தையும், என்னையும் படைத்தீர்களென்று எனக்குத் தெரியும். ஆனால் நான் மட்டும் தனிமையிலிருக்கிறேன். ஆப்பிளைச் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது" என்று ஏவாள் கூறினாள். 

"சரி, அப்படியானால் உனக்காக ஒரு மனிதனை உருவாக்குகிறேன்" என்று எல்லாம் வல்ல இறைவன் பதிலளித்தார்.

ஏவாள், "மனிதனென்றால் எப்படியிருப்பான்" என்றாள்.

"அவன் ஒரு குறையுள்ள ஜந்து, முரடன், தான் என்ற அகம்பாவம் நிரம்ப உள்ளவன், யார் சொல்லும் கேட்காதவன். ஆனால், அவன் பெரியவனாகவும், வேகமாக ஓடக்கூடிய கட்டுமஸ்தான உடலை உடையவன் ஆவான். நன்றாக சண்டை போடவும், மிருகங்களை வேட்டையாடவும் தெரிந்தவன்" என்றார்.

"பரவாயில்லையே" என்று பதிலளித்தாள்.


"அடம்! நீ தான் முதலில் படைக்கப்பட்டாய்,ஆளை விடு!"
"ஆனால் ஒரு எச்சரிக்கை" என்ற தேவன், "நான் அவனைத்தான் முதலில் படைத்தேன் என்று நீ அவனை நம்ப வைக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment