"Lonely Planet" சுற்றுலா பயண வழிகாட்டி..!
"Travel doesn’t become adventure until you leave yourself behind."
-Marty Rubin-
“சுற்றுலா” என்பது "ஒரு பயணி சாதாரணமாக தான் வாழும் சூழலை விட்டு வெளியேறி, பயண நோக்கத்துடன், கணிசமான காலத்திற்கு பயணம் செய்யும் செயல்பாடு" என்று குறிப்பிடலாம். ஆனால் அதனை மட்டும் வைத்து சுற்றுலாவை மதிப்பிடுவது போதுமானது அல்ல; அதன் மூலம் ஏற்படும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் விளைவுகள், பெறும் பயன்கள், அதன் வழியில் உண்டாகும் சவால்கள் அனைத்தும் சேர்ந்து பார்க்கப்பட வேண்டும். சமூகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு “பொறுப்புணர்வு, நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஆதரவு” என்ற மூன்று கோணங்களும் முக்கியமானவை.
இவற்றின் அடிப்படையிலேயே Lonely Planet தனது வழிகாட்டி செயற்பாட்டு கைநூலை வடிவமைக்கிறது. அந்த வகையில்,உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை கவரும் மற்றும் வழிகாட்டும் மிகப் பெரிய பெயராக "Lonely Planet" இன்று விளங்குகின்றது.
"சுற்றுலா" என்பது வெறும் இடமாற்றம் அல்ல, அனுபவம் அந்த அனுபவத்தை நம்பகமாகப் பகிர்ந்தளிக்கும் நிறுவனம் தான் Lonely Planet.
இது உலகப் பயண வரைபடத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் புரட்சிகரமான முயற்சியாகும்.
Lonely Planet நிறுவனம் 1973 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தம்பதிகள் Tony Wheeler மற்றும் Maureen Wheeler ஆகியோரால் நிறுவப்பட்டது.
இவர்கள் 1972 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்தியா, நேபாளம் மற்றும் தென்கிழக்காசியாவிற்கான ஓர் நீண்ட சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் எழுதிய புத்தகம் “Across Asia on the Cheap” இது அவர்களின் முதல் சுற்றுலா வழிகாட்டி புத்தகமாக வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தின் வெற்றி "Lonely Planet Publications" என்ற நிறுவனத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
“Lonely Planet” என்ற பெயர் உண்மையில் ஒரு தவறான புரிதலின் விளைவு (misheard lyric) ஆகும்.Tony Wheeler, Joe Cocker பாடிய “Space Captain” என்ற பாடலில் உள்ள “Lovely Planet” என்ற சொல்லை தவறாக “Lonely Planet” எனக் கேட்டார். அதுவே உலகப்புகழ்பெற்ற நிறுவனத்தின் பெயராக மாறியது.
1970களில் சிலர் மட்டுமே உலகை சுற்றியபோது, Lonely Planet சுற்றுலாவை அனைவருக்கும் அணுகத்தக்கதாக மாற்றியது.“Budget Travel” (சிக்கன பயணம்) என்ற கருதியலை உலகிற்கு அறிமுகப்படுத்திய நிறுவனமாக இது திகழ்கிறது.
1980களில் வெளியிடப்பட்ட “South-East Asia on a Shoestring” என்ற புத்தகம் சிக்கனப் பயணிகள் (backpackers) மத்தியில் இது "சிக்கனப் பயணிகளின் பைபிள்" (Backpacker’s Bible) என இந்த பதிப்பு அறியப்பட்டது.
1990–2000களில் நிறுவனம் உலகின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் மூலம் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வழிகாட்டி புத்தகங்களை வெளியிட்டது.இத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மின்நூல்கள் மற்றும் இணைய தளங்களும் தொடங்கப்பட்டது.
Lonely planetன் முதல் வெளியீடு 1973ல் "Across Asia on the Cheap" என்ற புத்தகம் ஆகும். இது,ஆசியா முழுவதும் குறைந்த செலவில் பயணிக்க உதவும், Lonely Planet நிறுவனம் வெளியிட்ட முதல் பயணக் கையேடு என்பது குறிப்பிடத்தக்கது.
இது Lonely Planet நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற புத்தகம் 1981ல் எழுதப்பட்ட "South-East Asia on a Shoestring" என்ற நூல். இது உலகப்புகழ் பெற்ற வழிகாட்டி நூல் என்பது குறிப்பிடத்தக்கது.Tony மற்றும் Maureen Wheeler எழுதிய இப் புத்தகம் சிக்கன செலவு பயணிகளுக்கான வழிகாட்டி (budget travel guide) என்ற நோக்கில் வெளியிடப்பட்டது.இந்த வெளியீட்டின் மூலம் Lonely Planet நிறுவனத்தின் சர்வதேச புகழ் மேலோங்க ஆரம்பித்தது.
“Shoestring” என்றால் குறைந்த செலவு அல்லது சிக்கன செலவு என பொருள்.இதன் மூலம், South-East Asia-விற்கான கிராமங்கள், உணவகம், வாடகை வீடுகள், போக்குவரத்து வழித்தடங்கள் போன்ற தகவல்கள் பயணிகளுக்கு கிடைத்தன.
2007ல் BBC உலகலாவிய நிறுவனம் Lonely Planet ஐ வாங்கியது.2013ல்BBC நிறுவனம் அதை அமெரிக்காவின் NC2 Media க்கு விற்றது. பின்,2020களில் Red Ventures குழுமத்தின் கீழ் “Digital Travel Media” என்ற வடிவில் இது விரிவடைந்தது.
Lonely Planet நிறுவனத்தின் முக்கிய நோக்கம், “உண்மையான அனுபவத்துடன், பொறுப்புணர்ச்சியுடன் உலகை ஆராய பயணிகளை ஊக்குவிப்பது." அதாவது, சுற்றுலா என்பது வெறும் கண்களால் பார்க்கும் விடயம் அல்ல, அது ஒரு கலாசார பிணைப்பு, சுற்றுச்சூழல் பொறுப்பு, மனித நேய அனுபவம் என்பதைக் காட்டுகிறது.
இந்த நிறுவனத்தின் சிறப்பு என்பது,
1. நேரடி ஆய்வு – அவர்களின் எழுத்தாளர்கள் தாமே அந்த இடங்களுக்கு பயணம் செய்து, அங்கு வாழ்ந்து தகவல்களை சேகரிப்பது.
2. நம்பகத்தன்மை – எந்த விளம்பர நிதியுடனும் சார்ந்ததல்லாத சுயாதீன மதிப்பீடு.
3. பொறுப்பான பயணம் – சுற்றுச்சூழல் பாதுகாப்பும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மதிப்பதும்.
4. சமூகப் பங்களிப்பு – குறைந்த வசதியுள்ள நாடுகளில் நிலைத்த பயணத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள்.
தற்போதைய நிலை (2025) என பார்க்கும் போது,இன்றைய நிலையில் Lonely Planet ஆனது 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வழிகாட்டிகளை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் “Best in Travel” என்ற பட்டியலை வெளியிடுகிறது, அதில் சிறந்த நகரங்கள், நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இடம்பெறுகின்றன.
2026 ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம் (Jaffna, Sri Lanka) இடம்பெற்றுள்ளது என்பது இலங்கைக்கு பெருமை தரும் விடயம்.
சுதந்திரம் பெற்ற பிறகு யாழ்ப்பாணம் புதிய சுற்றுலா இடமாக வளர்ந்து வருகிறது.
Lonely Planet போன்ற உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் புதிய “hidden gem”(“மறைந்த செல்வம்”) இடங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தையும் தேர்வு செய்துள்ளமை வரவேற்க வேண்டிய விடயம்.
"Hidden Gem" என்பது,பொதுவாக பரிசீலனை செய்யப்படாத, பயணிகள் குறைவாக அறிந்த இடங்களை குறிக்கிறது. அதாவது அழகும், சிறப்பும் நிறைந்த, ஆனால் பொதுவாக மக்களால் அறியப்படாத இடம் என்பதே அதன் பொருள்.
தற்போது Lonely Planet நிறுவனத்தின் தலைமையகம் Franklin, Tennessee, USAயில் அமைந்துள்ளது, மேலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் அவர்களின் புத்தகங்களையும் இணைய தளத்தையும் பயன்படுத்துகின்றனர்.
Lonely Planet என்பது ஒரு சாதாரண சுற்றுலா நிறுவனம் அல்ல அது உலகத்தை உணர வைக்கும் கதாபாத்திரம் மற்றும் இது உலகத்தை உணர வைக்கும் கதை சொல்லி. பயணத்தை ஒரு பொழுதுபோக்காக அல்லாது , ஒரு கல்வியாகவும் அனுபவமாகவும் மாற்றிய நிறுவனம் இதுவே.1973ல் தொடங்கிய ஒரு சிறிய புத்தகத்தின் பயணம் இன்று உலகமெங்கும் “பயண கலாசார புரட்சி”(Travel Cultural Revolution) ஆக மாறியுள்ளது.
"Lonely Planet" ன் “Best in Travel 2026” பட்டியலில் இடம்பெற்ற 25 முக்கிய இடங்களின் ஒரு தொகுப்பு இது.
இடம் மற்றும் நாடு அல்லது பிரதேசம்
1PeruPeru-South America
2Jaffna-Sri Lanka
3Maineb-USA
4Cádizv-Spain
5Réunion -French overseas department (Indian Ocean)
6Botswana - Africa
7Cartagena - Colombia
8Finland -Europe
9Tipperary -Ireland
10Mexico City -Mexico
11Quetzaltenango -Guatemala
12British Columbia -Canada
13Sardinia - Italy
14LiberdadeSão Paulo - Brazil
15Utrecht -Netherlands
16Barbados -Caribbean
17Jeju‑DoSouth - Korea
18North Island -New Zealand
19Theodore Roosevelt National Park - USA (North Dakota)
20Quy Nhon - Vietnam
21Siem Reap - Cambodia
22Phuket - Thailand
23Ikara‑Flinders Ranges & OutbackSouth - Australia
24Tunisia- Africa / North Africa
25Solomon - IslandsOceania
"The world is a book, and those who do not travel read only one page."
-Saint Augustine-
நா.இராஜமனோகரன்
02 November 2025


No comments:
Post a Comment