பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம்!
(International Covenant on Civil
and Political Rights)
இலங்கையில் ICCPR என்பது மிக முக்கியமான மனித உரிமை சட்ட அடிப்படையைக் குறிக்கும். இதன் முழுப் பெயர் International Covenant on Civil and Political Rights (பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம்)
ICCPR என்பது...!
ICCPR என்பது 1966 ஆம் ஆண்டு ஐ.நா. (United Nations) உருவாக்கிய முக்கியமான மனித உரிமை சர்வதேச ஒப்பந்தம்.
இதன் நோக்கம் எந்த நாட்டிலிருந்தும், எந்த சமூகத்திலிருந்தும், எந்த மத,இனம்,மொழி, வர்க்கத்திலிருந்து வந்தாலும், ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை மனித உரிமை மற்றும் அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்பதே.
இலங்கை 1980களில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
ICCPR வழங்கும் முக்கியமான மனித உரிமைகள்...
1. உயிர் வாழும் உரிமை (Right to Life)...
எவரும் சட்டவிரோதமாக உயிரை இழக்கச் செய்யப்படக்கூடாது.
2. சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமை...
திடீர் கைது, சட்டவிரோத கைது, ரகசிய சிறை போன்றவை தடை.
3. சித்திரவதை (Torture) தடை...
எந்தக் காரணத்திற்கும் மனிதர்களை சித்திரவதைப்படுத்தக்கூடாது.
4. சுதந்திரமான விசாரணை மற்றும் நீதியான நீதிமன்ற நடைமுறை...
நீதிமன்றத்தில் நியாயமான முறையில் விசாரணை பெறும் உரிமை.
5. மத, சொற்பொழிவு, கருத்து வெளிப்படுத்தும் உரிமை...
அமைதியான முறையில் கருத்து சொல்வது, ஊடக சுதந்திரம், மத சடங்கு பின்பற்றுதல் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.
6. அமைதியான கூட்டம் மற்றும் தொழிற் சங்க உரிமை...
போராட்டம் நடத்துதல், அமைதியான கூட்டம், தொழிற்சங்கங்கள் போன்றவை சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுகின்றன.
7. இன, மத, மொழி அடிப்படையிலான பாகுபாடு தடை...
எவரும் பாகுபாடின்றி மனித உரிமை பெற வேண்டும்.
இலங்கையில் ICCPR சட்டமாக உருவானது...
இலங்கையில் இது ICCPR Act No. 56 of 2007 என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.
இதன் முக்கிய நோக்கம்:
1.பாகுபாடுகளைத் தடுக்க
2.மத வெறுப்பு தூண்டும் செயல்களை தடுக்க
3.மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திர உரிமையை உறுதி செய்ய
ICCPR Act (இலங்கை) முக்கிய அம்சங்கள்
மத, இன, மொழி வெறுப்பு தூண்டும் உரை அல்லது செயல்களுக்கு தடை.
எவரேனும் இனவெறி தூண்டும் வகையில்
மதவெறி பரப்பும் வகையில்
வன்முறையை தூண்டும் வகையில்
பேசினால் அல்லது செயல்பட்டால்
கடுமையான தண்டனை வழங்கப்படும்.
மனிதரை ஆபத்துக்கு உள்ளாக்கும் வெறுப்பு பேச்சு குற்றம் ஆகும்.
"கூடிய வெறுப்பு உருவாக்கும்" உரை அல்லது பதிவுகள் குற்றமாக கருதப்படும்.
ICCPRன் முக்கியத்துவம்...
1.ஒவ்வொருவரும் சமமான மனித உரிமை பெறுவதற்கு
2.போலீஸ், அரசு, தனிநபர் என எவராலும் உரிமை மீறப்படாமல் இருக்க
3.மத, இன முரண்பாடுகளைத் தடுக்க
4.நீதிமன்றத்தில் பாதுகாப்பு கிடைக்க
5.நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த
சுருக்கமாக கூறின்,ICCPR என்பது மனிதனுடைய சுதந்திரம், பாதுகாப்பு, சமத்துவம், கருத்து தெரிவிக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச சட்டம்.
இலங்கையில் இதை மீறினால் தண்டனை உண்டு என்பதாகும்.
இச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர Attorney General (AG) இன் அனுமதி அவசியம்.
இதற்கான தண்டனை அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை,அபராதம் (நீதிமன்றத்தின் விருப்பப்படி)
நா.இராஜமனோகரன்
27 November 2025

No comments:
Post a Comment