GovPay அடுத்தகட்ட தொழில்நுட்ப நகர்வு...
இலங்கையின் டிஜிட்டல் கட்டண முறையான GovPay, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) நோக்கிய உலகளாவிய போக்கை இங்கு பிரதிபலிக்கிறது, ஆனால் அதன் வெற்றி சைபர் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் பொது நம்பிக்கையில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத்தது அதன் வெற்றி அமையும்.
சரி,
நீங்கள் சாரதியாக இருக்கும்பட்சத்தில் இலங்கையில் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த தண்டத்தை செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள்!
நீங்கள் தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம், வரிசையில் நிற்க வேண்டாம், காவல் நிலையத்திற்குத் செல்லவேண்டிய அவசியமில்லை. ஏப்ரல் 2025 இல் சோதனை முறையில் தொடங்கப்பட்ட ஒரு புரட்சிகரமான Digital கட்டண முறையான GovPay உடன் இது இப்போது ஒரு யதார்த்தமாகிவிட்டது.
ICTA மற்றும் Digital அமைச்சகத்தால், இலங்கை காவல்துறை மற்றும் LankaPay உடன் இணைந்து, GovPay, வாகன ஓட்டுநர்கள் கைபேசி வங்கி செயலிகள் மற்றும் இணைய வங்கி மூலம் உடனடியாக அபராதம் செலுத்த இது அனுமதிக்கிறது!
பெரும்பாலும் வீதியோரத்தில் இருக்கும்போதே இதை நீங்கள் செய்யமுடியும் என்பது தான் இதன் இலகு நிலை.
சுருங்கக் கூறின்!,
"இலங்கையில் GovPay என்பது அரச சேவைகளுக்கான பணப்பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தும் ஒரு நிகழ்நிலைக் கட்டண தளம்" ஆகும்.
இது 2025 பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இலங்கையின் Digital பொருளாதார மாற்றத்தின் முக்கிய அங்கமாகும் இது பார்க்கப்படுகிறது.
GovPay-இன் முக்கிய அம்சங்கள்
(Key Features of GovPay)
1.மையப்படுத்தப்பட்ட கட்டண தளம்
(Centralized Payment Platform)
GovPay, ICTA மற்றும் LankaPay இணைந்து உருவாக்கிய ஒரு ஒருங்கிணைந்த கட்டண தளம் ஆகும்.
2.பல்வேறு கட்டண முறைகள்
(Multiple Payment Methods)
வங்கி கணக்குகள், கார்டுகள், மற்றும் digital wallets. போன்ற பல்வேறு முறைகள் மூலம் கட்டணங்களை நீங்கள் செலுத்தலாம்.
3.பயனுகருநர் நட்பு அனுபவம்
(User-Friendly Experience)
எளிமையான இடைமுகம் மற்றும் விரைவான பரிவர்த்தனைகளுடன் பயனுகருநர்ளுக்கு வசதியான அனுபவத்தை இது வழங்குகிறது.
4.பயன்பாட்டுத் தளங்கள்
(Access Platforms)
GovPay தளத்தை வங்கி செயலிகள், LANKAQR மற்றும் இணையதளம் மூலமாக அணுகலாம்.
5.பரிமாற்றக் கட்டணங்கள்( Transaction Fees)
பரிவர்த்தனை கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன( ரூ.50 இலிருந்து ரூ.15 வரை.)
GovPay ஆனது எமக்கு வேலையில் இருந்து விடுப்பு எடுப்பது அல்லது அபராதம் செலுத்த நீண்ட தூரம் பயணம் செய்வது போன்ற நாட்களை இல்லாது செய்கிறது. பணம் செலுத்துவதிலிருந்து வாகனஉரிமத்தை திரும்பப் பெறுவது வரையிலான முழு செயல்முறையும் இப்போது குறித்த இடத்திலேயே நிகழலாம்.
டிஜிட்டல் சிட்டைகள் ஓட்டுநர் மற்றும் அதிகாரி இருவருக்கும் உடனடியாக அனுப்பப்படுகின்றன. இது இலஞ்சம் அல்லது கையூட்டுக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. இது சட்ட அமுலாக்கம் மற்றும் அரசு சேவைகளில் பொதுமக்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்புகிறது.
Hela Payமற்றும் iPay போன்ற பிரபலமான நிதி தொழில்நுட்ப பயன்பாடுகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், GovPay பலருக்கு அணுகக்கூடியதாக உள்ளது. இது ஒரே நேரத்தில் பல அபராதம் செலுத்துதல்களுக்கு வழிவிடுகின்றது.மற்றும் பயனுகருநர் அனுபவத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.GovPay மக்களை முறையான நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட ஊக்குவிக்கிறது என்பதுடன், இது பணப்புழக்கம் மற்றும் பரந்த நிதி உள்ளடக்கத்திற்கும் உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி, மிக முக்கியமாக, GovPay ஒரு நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகிறது . அரசாங்க சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களை ஒரு விதிமுறையாக இது மாற்றுகிறது. இது இலங்கை முழுவதும் பரந்த நிநி தொழில்நுட்பத்திற்கான அடித்தளமாக இது அமையலாம்.
சிலர் இன்னும் பணத்தின் பரிவத்தனையையே விரும்புகிறார்கள் என்பதுடன், மேலும் டிஜிட்டல் அணுகல் குறித்த பிரச்சினைகளும் உள்ளன, குறிப்பாக முதியவர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே இது காணப்படுகிறது. தபால் துறை போன்ற பாரம்பரிய சேவைளுக்கு இதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளைக் குறைக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
பொதுவாக சில சவால்களை இங்கு குறிப்பிடலாம்...
1. தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு சவால்கள்
2. ஒழுங்குமுறை மற்றும் சட்ட ரீதியான சவால்கள்
3. பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நிதி உள்ளடக்கம்
4. பணம் செலுத்தும் பழக்கவழக்கங்களில் மாற்றம்
5. போக்குவரத்து அபராதங்கள் தொடர்பான சவால்கள்
6. பாரம்பரிய சேவைகள் மீது தாக்கம்
எவ்வாறாயினும், ஏப்ரல் 30, 2025 க்குப் பிறகு இந்த அமைப்பு நாடு தழுவிய அளவில் விரிவடைவதால், பல்வேறு விருப்பங்களை கவனத்தில் கொண்டு டிஜிட்டல் கல்வியறிவை விரிவுபடுத்துவதும் அவசியம்.
நா.இராஜமனோகரன்
22 April 2025

No comments:
Post a Comment