Tuesday, January 7, 2014

நெடுந்தீவுப் பயணமும்... பெருக்கு மரமும்...!



நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று

ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள்
இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது

நெடுந்தீவு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் 
பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது...




நெடுந்தீவு ஓடத்துறை


அவையாவன...

        தலைத் தீவு
        பசுத்தீவு
        பால்தீவு
        அபிசேகத் தீவு
        தயிர் தீவு 

யாழ்ப்பாணத்திலிருந்து  மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே

யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும்

ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. புங்குடுதீவில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர வடிவில் 30 கிமீ சுற்றளவையும், 48 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது என்பர்.

இது பெயருக்கு ஏற்றாற்போல் மிகப்பரந்த கடல்வெளியில் நீண்டு நெடியதாய் அமைந்திருக்கிறது

இலங்கையின் தீவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அந்தவகையில் நெடுந்தீவும் பல்வேறு தனித்துவங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது.அவற்றில் பெருக்கு மரமும் ஒன்று.நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் இந்தப் பெருக்கு மரம்.பலம் பொருந்திய யானைகள் ஒவ்வொரு திசையிலும் தம் துதிக்கைகளை நீட்டிக்கொண்டிருப்பதாய் விசாலமாகக் காட்சி தருகிறது.
ஆறேழு பேர் உள்ளே சென்று நிற்கக் கூடியளவுக்கு மரத்தினுள் குகைபோன்று காணப்படுகின்றது. உள்ளே தாராளமான இட வசதியும் உண்டு. எவ்வளவுதான் வெயில் வாட்டி வதைத்தாலும் உள்ளே சுகமான குளிர்ச்சி நிலவுகிறது.

இயற்கையின் அற்புதங்களில் ஒன்றான பெருக்கு மரம் குறித்த சில விடயங்கள்
பெருக்கு மரங்கள் வெப்ப மண்டலக் காடுகளில் வளர்கின்றன.
இவற்றை பாபப் (Baobab)என்ற பொதுப்பெயரால் அழைக்கின்றனர்.
இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மரங்களே காணப்படுகின்றன.

பெருக்கு மரத்தருகில் நானும் எனது நண்பர்களும்...!

இதன் அடி மரம் மிகவும் விசாலமானது.
இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன.
இதன் இலைகள் ஐந்தாகப் பிரிந்து மனித விரல்களைப் போல காட்சிதருகின்றன.
மனிதனின் ஐந்து முக்கியமான நோய்களை இந்த மரம் குணப்படுத்துவதற்கான குறியீடுதான் இது என்கிறார்கள் நெடுந்தீவு வாசிகள்.
1.குருதிப்பெருக்கம்
2.நரம்புத் தளர்ச்சி
            3.அம்மை
4.இரத்த அழுத்தம்
5.தொற்றுநோய்
ஆகியவற்றுக்கு பெருக்கு மரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள் போன்றவை பயன்படுகின்றன. சித்த மருத்துவத்தில் நோய் குணமாக்கும் மருந்துகளில் பெருக்கு மரம் பிரதான இடத்தை வகிக்கிறது.

பெருக்கு மரத்தின் உள்ளே , உள்ள மேல் பாகம்


அதிக வெப்ப காலங்களில் கூட இவை தளர்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் மண்ணுக்குள் விரிந்து பரந்த இவற்றின் வேர்கள் அதிகளவு தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்கின்றன. இதனால் வரட்சியான காலப்பகுதியில் கூட மரம் வாடுவதில்லை.தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவும் காலத்தில் நம் முன்னோர்கள் இந்த மரத்தின் வேர்களைப் பிழிந்து சாறெடுத்துக் குடித்துள்ளனர். அது அவர்களின் நோய்களைக் குணப்படுத்தியதுடன் நீண்ட ஆயுளையும் கொடுத்துள்ளது. 

பெருக்கு மரத்தரத்தின் உள்ளே நான்


போர்த்துக்கேய, ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களில் பெருக்கு மரத்தினுள் ஒளிந்திருந்து அவர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் நெடுந்தீவு மக்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பெருக்கு மரப் பழங்களிலுள்ள சாறு பலம் தரும் 
மதுபான வகையாகவும் பயன்படுத்தப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
பெருக்கு மரத்தின் பட்டைகள் உறுதியானவை. அவற்றை நாருரித்து 
ஆடைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.
நார் எடுப்பது பற்றித் தெரியும் ஆனால் ஆடையாகப் 
பயன்படுத்தப்பட்டது பற்றித் தெரியாது’ – இது கிராமத்தவர் ஒருவரின் கருத்து.
இச்செயற்பாடு அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம்.


நெடுந்தீவில் அதிகளவில் பெருக்கு மரங்கள் இருந்ததாகவும் 
ஒல்லாந்தர் காலத்தில் அவை அழிக்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.

பலம் என்றால் 

பெருக்கு மரம்போல் இரு’ என மூதாதையர்கள் அழுத்திக் கூறுவதுண்டு.

ஏன் இன்னும் கூட அப்படிச் சொல்வார்கள்.பெருக்குப் பட்டையில பட்டு செஞ்சி தந்தவரே….கருக்கலுக்கு வந்து கட்டிவிட்டுப் போனாலென்ன?..’ என நாட்டுப்புறப் பாடலொன்று உண்டு.

பெருக்குப் பட்டையிலிருந்து பட்டு செய்து தந்தவரே அந்தி மங்கும் நேரத்தில் வந்து அதைக் கட்டிவிட்டுப்போனாலென்ன?’ எனப் பாடுகிறாள் காதலி.
காதல் கொண்ட பெண் காதலனை நோக்கி அன்போடு பாடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. 

பெருக்கு மரம் ஆடைசெய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இந்தப்பாடல் உதாரணமாக அமைகிறது.

சுமார் 300 வருடகாலம் பழைமையான இந்தப் பெருக்கு மரத்தைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.

இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான
மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும்
இதுதான்.

 நெடுந்தீவுப் பெருக்கு மரம்



தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி
முனையில் உள்ளது.


மன்னார் பெருக்கு மரம்

Wednesday, December 25, 2013

சந்திர சேகர நாயகனே - தினம் அருள் தந்து காத்திடும் விநாயகனே !




தொகையறா
காலிங்கராஜன் குளத்தருகே அமர்ந்திருந்து
அருளாட்சி புரிகின்ற கணபதியே !
போற்றி ! போற்றி !
நல்லுரில் பின்னவன் வீற்றிருந்தருள !
விநாயகர் வீதியில் முன்னவன் நீ அருள !
துன்பங்கள் தீர்த்திடும் துதிக்கையை பற்றினோம்
தும்பி முகத்தானே துயர் களைவாய்
போற்றி ! போற்றி !

பாடல்
சந்திர சேகர  நாயகனே - தினம்
அருள் தந்து  காத்திடும்  விநாயகனே  !
கற் றோரும்  மற்றோரும்  துதிக்கின்ற
கருணா மூர்த்தி எம் விநாயகனே !
                     சந்திரசேகர நாயகனே…!

தேரேறி  ஊரெல்லாம்  வலம்  வந்தாய்
உனை  துதித்தவர்   ஊரெங்கும்  வலம்வந்தார் !
நிலையாக  நீ  யமர்ந்தாய்   கோவிலிலே
நிர்க்கதியாய்  நாம்  அலைந்தோம்   வீதியிலே !
                                                                சந்திரசேகர நாயகனே…!

இசையோடு தமிழ் கலந்து உனைப்பாடினோம் !
உணர்வோடு தினம் உந்தன் தலம்நாடினோம் !
வீடிழந்த வேளையிலும் உனைத் தேடினோம் !
வேதனையில் கரம் பற்ற உனைநாடினோம் !
                                                                சந்திரசேகர நாயகனே…!


வேலோடு தம்பி யுடன் வருவாயோ !
வேதனையை நீ களைந்துசுகம் தருவாயோ !
பாலோடும் ஊராக்கித் தரு வாயோ !
இரத்த மணமிழந்த மண்எமக்கு தருவாயோ !
                                                                சந்திரசேகர நாயகனே…!

பாலோடு  தேன்கலந்து தினம்பாடுவேன்-உந்தன்  !
ஓங்கார  முகம்காண  தினம் நாடுவேன்  !
ஔவையைதூக்கி  நீ  கைலையில்  வைத்தாய்  !
எங்களைதூக்கி  எம்  குடிசையில் வைப்பாய் !
                     சந்திரசேகர நாயகனே…!



[1998ம் ஆண்டு எனது பிறந்த மண்ணில் எழுந்தரருளி இருக்கும் “சந்திரசேரப் பிள்ளையா(ர்)”ரை நோக்கி என்னால் எழுதப்பட்டது.]


  சந்திரசேரப் பிள்ளையார்


நிர்க்கதியாய்  நாம்  அலைந்தோம்   வீதியிலே !
வீடிழந்த வேளையிலும் உனைத் தேடினோம் !

Wednesday, September 4, 2013

எண்ணைப் போரின் அடுத்த குறி சிரியா...!

சிரியா பற்றிய குறிப்பு



சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் 
அமைந்துள்ள ஒரு நாடாகும். 
இது மேற்கில் லெபனானையும்,
தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும்,
கிழக்கில் ஈராக்கையும்,
 வடக்கே துருக்கியையும்எல்லையாகக் கொண்டுள்ளது. 
நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து 
மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. 
ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு 
முன்பு வரை காணலாம். 
இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் 
அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், 
மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும்,
10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 
1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 
1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.

வரலாற்றில் சிறியா இன்றைய லெபனான், 
இசுரேல்,பாலஸ்தீனம் போன்றவற்றையும்
யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் 
வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை 
நவீன சிரியாவின் ஏனைய பகுதிகளையும் 
கொண்டதாக கருத்தப்பட்டது. 
இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது.
1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர்
இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை 
கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் 
பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் 
தொடர்பான சர்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.

சிரியாவின் இன்றைய நிலை


வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக், லிபியா 
வரிசையில் அடுத்ததாக அமெரிக்க ராணுவத்தின் 
தலையீட்டால் தவிக்க இருப்பது சிரியா. இராக்கிலும், 
லிபியாவிலும் முன்வைக்கப்பட்ட அதே காரணங்களைத்தான் 
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான 
சில அரபு நாடுகளும் சிரியாமீது ராணுவத் தாக்குதலில்
 ஈடுபடுவதற்கும் காரணம் கூறுகிறார்கள்.

பொறுப்பற்ற ஆட்சி, 
பொதுமக்களை அழிப்பதற்காக ரசாயன 
ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மனிதாபிமானமில்லாத
 படுகொலைகள் என்று அதிபர் பஷார் அல் அஸாத் 
அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.

சிரியா பிரச்னையின் பின்னணி
ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல. 
எப்படி இராக்கின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து, 
அதற்கு முன்னோடியாக ஆப்கானிஸ்தானின்
 தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்
 சாக்கில் சவூதி அரேபியாவில் தங்கள் ராணுவ
 தளத்தை அமைத்துக் கொண்டார்களோ, 
அதேபோல அடுத்ததாக ஈரானைத் தாக்குவதற்காக
 இப்போது சிரியாமீது ராணுவப் படையெடுப்பு 
நடத்த முயற்சிக்கிறார்கள். லிபியாவில் தங்களது
 நோக்கம் நிறைவேறாத நிலையில் 
இப்போது சிரியா குறிவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவே!

சிரியாவில் உள்நாட்டுப் பிரச்னை 
இருந்தது என்னவோ உண்மை. அதை 
பயன்படுத்தி, சிரியாவிலுள்ள ஸன்னி 
முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரபு 
நாடுகள் ஆயுத உதவி செய்து, 
பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு 
எதிராகப் போராட்டத்தை முடுக்கி விட்டன.
 இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர்
 இந்தப் போராட்டத்தில் சிரியாவில் 
கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் 
அஸாத் ஆதரவு ராணுவத்திற்கும் இடையே 
நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான 
அப்பாவிப் பொதுமக்கள் மரணமடைந்தனர். 
இவர்கள் ராணுவத்தின் ரசாயன 
ஆயுதங்களால் தாக்கப்பட்டனர் என்பது
போராட்டக்காரர்கள் சார்பில் அவர்கள்
ஆதரவாளர்களான அரபு நாடுகள் மற்றும் 
அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதே
 போராட்டக்காரர்கள் என்பதும், தங்களது 
அரசுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ 
நடவடிக்கை எடுக்க அதன் மூலம் காரணம்
 ஏற்படுத்துகிறார்கள் என்பதும் பஷார் 
அல் அஸாத் தலைமையிலான அரசுத் 
தரப்பின் கூற்று. 
அதில் உண்மை இல்லாமல் இல்லை.

 கடந்த மே மாதம் ஐ.நா. சபையால் 
நியமிக்கப்பட்ட "கார்லாடெல் போன்ட்டே" குழுவின் 
விசாரணை அறிக்கை, போராளிகள்தான் 
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் 
தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, துருக்கி 
எல்லையில் கைது செய்யப்பட்ட 
போராட்டக்காரர்களிடமிருந்து  
2 கிலோ "சரின்' வாயு கைப்பற்றப்பட்டிருக்கிறது.

 இராக்கிலும் சதாம் ஹுசேன் அரசின் மீது 
இதேபோலக் குற்றம்சாட்டித்தான்  இராணுவ
 நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. 
சதாம் ஹுசேன் கொல்லப்பட்டதும், 
அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி 
மாற்றம் ஏற்பட்டது. குற்றச்சாட்டு பொய் 
என்பதை அமெரிக்காவே ஒத்துக் கொண்டது. 
அதேபோல, இப்போது சிரியாவிலும் 
ஒரு பொய்க்காரணம் கூறப்படுகிறது என்பது தெளிவு.

  கட்டார் மற்றும் அரேபிய நாடுகளின் 
நேரிடையான, மறைமுகமான ஆதரவுடனும், 
அமெரிக்காவின் ஆசியுடனும் போராளிகள் 
ஆயுதமும், பண உதவியும் வழங்கப்பட்டு 
அஸாத் அரசுக்கு எதிராகப் போராடத் 
தூண்டப்படுகிறார்கள். அவர்களை 
எதிர்கொள்ள ஈரான் அஸாதின் படைகளுக்கு 
உதவுகிறது. ரஷியா, சீனா ஆகிய நாடுகளின்
ஆதரவு, அஸாத் அரசுக்கு இருக்கிறது. இது
தான் சிரியா பிரச்னைக்குக் காரணம்.

 ஐ.நா. சபைத் தீர்மானம், போராட்டக்காரர்களுக்கு
 ஆயுத உதவி, கடைசியாக அமெரிக்காவின்
நேச நாட்டுப் படையின் நேரடி 
இராணுவத் தலையீடு - இவைதான் 
லிபியாவில் கடாபி அரசைப் பதவியிலிருந்து
 அகற்ற அமெரிக்கா கையாண்ட உத்தி. 
அதையேதான் சிரியாவிலும் நடைமுறைப்படுத்த 
நினைத்தது அமெரிக்கா. 
ஆனால், லிபியா அனுபவமும்,
 ரஷியா மற்றும் சீனாவின் எதிர்ப்பும், 
சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை 
ஆதரிக்க முடியாமல் ஐ.நா. சபையைத் தடுத்து விட்டது.

 
அமெரிக்காவுக்கு சிரியாவில் தலையிடுவதில் 
இன்னொரு தர்மசங்கடமும் இருக்கிறது. 
பஷார் அல் அஸாதின் அரசுக்கு எதிராகப்
 போராடும் ஸன்னி பிரிவு இஸ்லாமியப் 
போராளிகளில் பலர் அல்- கொய்தா 
ஆதரவாளர்கள் என்பதுதான் அது. 
போராளிகளுக்கு வலிமையான 
ஆயுதங்களை அளித்து பலப்படுத்தினால், 
அதுவே தங்களுக்கு எதிராகப்
 பயன்படுத்தப்பட்டு விடுமோ என்கிற 
அச்சம் அமெரிக்காவை பயமுறுத்துகிறது.

 அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் 
புரட்சியாளர்களுக்கு ஆதரவாகக் களம் 
இறங்கினால், அஸாத் அரசு உடனடியாக 
அடிபணிந்து விடப் போவதில்லை. மிகப்பெரிய
 போராட்டம் வெடித்து 1999 கோசோவோ 
பிரச்னைபோல, அக்கம்பக்கத்து நாடுகளுக்கு 
அகதிகள் ஆயிரக்கணக்கில் தஞ்சம் அடைய
 நேரிடும். ஈரான், சீனா, ரஷியா நாடுகளின் 
ஆதரவுடன் வியட்நாம் போல போர் நீளும். 
அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

அமெரிக்காவும் நட்பு நாடுகளும் 
ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் 
லிபியாவைப் போல சிரியாமீதும் இராணுவ 
நடவடிக்கையில் ஈடுபட்டால், அதுவே
 தவறான முன்னுதாரணமாகி உலகிலுள்ள 
ஏனைய நாடுகளுக்கும் ஏதாவது 
ஒரு காலகட்டத்தில் அச்சுறுத்தலாகக் கூடும்.

சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு 
காண அமெரிக்காவோ, ரஷியாவோ 
தயாராக இல்லை. காரணம், அன்னிய 
நாடுகளின் அக்கறை பக்கத்திலிருக்கும்
 ஈரானின் எண்ணெய் வளத்தின் 
மீதுதானே தவிர சிரிய நாட்டு 
மக்களின் நல்வாழ்வில் அல்ல.

உலக நாடுகளுக்கு ,உலக அமைதியில் 
அக்கறை இருக்குமேயானால், 
சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு 
காண வேண்டும் என்கிற தீர்மானத்தை 
ஐ.நா. சபையில் முன்மொழிந்து ஆதரவு 
திரட்டி நிறைவேற்ற வேண்டும்.
 நமக்கு அந்தக் கடமை உண்டு!










Monday, July 8, 2013

மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல...

மாணவர்களுக்கு:

  • போட்டு பெரிதாய் அலட்டிக் கொள்ளாதீர்கள். அமைதியாக, ரிலாக்ஸ்-ஆக இருங்கள்.
  • ஆறு முதல் எட்டு மணி நேரம் தினமும் தூங்குவது அவசியம். அப்படி உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுத்தால் மட்டுமே, நீங்கள் படிப்பதையெல்லாம், உங்களால் நினைவுபடுத்தி, தேர்வில் எழுத முடியும்
  • 5 முதல் 10 நிமிடங்கள் ஒவ்வொரு ஒரு மணி நேரம் ஒரு இடைவேளை எடுத்துக்க்கொள்ளுங்கள். நம் மூளையால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது. எனவே இடைவெளிகள் மிகவும் இன்றியமையாதவை.
  • எவ்வளவு படிக்கமுடியுமோ, அந்த அளவு மட்டுமே படியுங்கள். மிகவும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
  • கல்வியின் அதிமுக்கிய நோக்கம் என்னவென்றால், நீங்கள் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொள்வது தான். மதிப்பெண்கள் பெறுவது மட்டும்ல்ல. இந்த விஷயத்தை என் வாழ்வில், மிக தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன். இப்பொழுதாவது உணர்ந்து கொண்டேனே! எதுவும் தாமதம் கிடையாது அன்றோ!
  • உங்கள் நண்பர்களை எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அப்படி கேட்பது, தேர்வுக்கு முன் தேவையற்ற கவலை/பயத்திற்கு வழிவகுக்கும்.
  • நீங்கள் எடுக்கப்போகும் மதிப்பெண்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், படித்ததிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் நன்றாக புரிந்து படித்திருந்தால், மதிப்பெண்கள் தானாக வந்து தான் ஆக வேண்டும்.
  • கேள்வித்தாளைப் பார்த்தவுடன் பயந்துவிட வேண்டாம். உங்களால், கேள்விக்கு சம்மந்தப்பட்டு என்ன எழுத முடியுமோ, அதை எழுதுங்கள்.
  • தேர்வு அறையை விட்டு வெளியே வந்த பிறகு, பதில்களை பற்றி விவாதிக்க வேண்டாம், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்; அடுதது வரும் தேர்வுகளுக்கு நன்கு தயார் செய்ய முடியாமல் போகலாம்.

பெற்றோர்களுக்கு: 

 மற்றவர்களுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட வேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர் தங்கள் சொந்த வழிகளில் திறமையானவர்கள். சிலரால் நன்றாக படிக்க முடியும்., சிலரால் நன்றாக விளையாட முடியும். சிலரால் நன்றாக பாடமுடியும்.சிலரால் நன்றாக ஆட முடியும். அனைத்து விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை ஆனால் ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது அல்லவா!

  • நன்றாக படிக்க அவர்களுக்கு உதவுங்கள். படி படி என்று சொல்லி மன அழுத்தம் கொடுக்காதீர்கள்.
  • ”நீ ஒன்றுக்கும் உதவாதவன்/ள்" என்றெல்லாம் சொல்லாதீர்கள். மாறாக, "உனக்கு திறமை உண்டு, இன்னும் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும், நிச்சயம் உன்னால் முடியும்” என்று ஊக்கம் கொடுங்கள்.
  • தேர்வுக்கு பிறகு, ஒரு வேளை உங்கள் குழந்தைகள், பதற்றமாக இருந்தால் அவர்கள் அருகில் இருந்து, “ஒன்றும் பெரிதாய் நீ இழக்கவில்லை, எதற்கும் கவலைப்படாதே. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என்று ஆறுதல் கூறுங்கள்.
  • குழந்தைகளுக்கு தற்கொலை/தற்காயப்படுத்தும் எண்ணங்கள், மனச்சோர்வு போன்றவை இருந்தால், அவர்களை தனியாக விட்டு செல்லாதீர்கள், மதிப்பெண்கள் என்பவை மட்டும் வாழ்க்கை இல்லை என்று புரிய வையுங்கள்.

 எம் அனைவருக்கும் தெரிய வேண்டிய உண்மைகள்: 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - ஒரு சராசரி மாணவர்.
ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் இணை நிறுவனர், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் தலைவர், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்.
தாமஸ் ஆல்வா எடிசன் - விஞ்ஞானி, பள்ளியிலிருந்து பாதியில் வெளிவேற்றப்பட்டவர்
வின்ஸ்டன் சர்ச்சில் - பிரிட்டன் முன்னாள் பிரதமர், எழுத்தாளர் மற்றும் ஓவியர், தனது படிப்பில் சராசரிக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்.

இந்த நபர்கள் இல்லை என்றால், நம் நிலைமை என்னவாக இருந்திருக்கும்??

"எடிசன் இல்லாமல் நம் வாழ்க்கை எப்போதும் இருண்டதாக இருந்திருக்கும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் இல்லை ஐ-போன்கள்.

பில் கேட்ஸ் இல்லாமல், கணிப்பொறி என்பது தூரத்து கனவாக இருந்திருக்கும்.


ஒப்பீட்டில் நல்லவள்...
நல்ல படிப்பவள்...
நல்ல அறிவாளி...
நல்ல திறமைசாலி...

இதில் எதுவும் வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை.

அது போன்று தான்...

மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல...

நீங்கள் நீங்களாக இருங்கள்...

Sunday, June 23, 2013

முதியவரே !,என் வயது என்ன?

ஒரு பெண் தனக்கு 47 வயது என்றாலும் தான் இளமையாக இருப்பதாக நினைப்பு! இந்த நினைப்பை அவ்வப்போது அடுத்தவரிடம் தனது வயது என்ன என்று கேட்டு அவர்கள் குறைவாக சொன்னால் புளகாங்கிதம் அடைந்து உச்சி குளிர்வார். இது இவரது பலவீனம் அல்லது ஒரு பொழுதுபோக்கு அல்லது தலைக்கேறிய பெருமிதம் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.

இவ்வாறான இந்தப் பெண் மார்க்கெட் செல்கிறார். அங்கு காய்கறிக் கடைக்காரரிடம் தன் வயது என்ன என்கிறார். அவர் உடனே என்ன ஒரு 30 இருக்குமா? என்கிறார் உடனே புன்முறுவலுடன் 47 என்று கூறுகிறார். வியாபாரி பார்த்தா தெரியவேயில்லை என்று கூற பெருமிதம் தலைக்கேறுகிறது.

அடுத்ததாக ஷாப்பிங் செல்லும்போது பலசரக்கு கடை ஒன்றில் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் பர்சேஸ் எல்லாம் முடித்த பிறகு என் வயது எவ்வளவு என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்கிறார். அவர் என்ன 27லேர்ந்து 30 இருக்கும் என்கிறார். சிரித்தபடியே 47 என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.

அடுத்ததாக மெக்டொனால்ட் உணவகத்திற்கு வந்து உணவுப்பொட்டலங்களை பார்சல் வாங்கிக் கொண்டு தனக்கு சர்வ் செய்த அந்த ஊழியரிடம் என் உண்மையான வயதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்கிறார். அவரும் 29 அல்லது 30 என்கிறார். இல்லை 47 என்கிறார்.

இப்படியே போய் கடைசியில் பஸ் ஸ்டாப்பிற்கு வருகிறார். அருகில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். சரி இவரிடமும் கடைசியாக கேட்டு விடுவோம் என்று என் உண்மையான வயதை உங்களால் கூற முடியுமா என்கிறார்.

அவர் உடனே எனக்கு கண் பார்வை அவ்வளவு கூர்மையாக இல்லை நான் உங்கள் மார்பை தொட்டுப் பார்த்தால் சரியாகச் சொல்லிவிடுவேன் என்கிறார். சற்றே பின் வாங்கிய இந்தப் பெண்மணி வயது தெரியாமல் இருக்கிறோம் என்ற பெருமிதத்தின் உச்சத்தில் சரி மறைவாக வாருங்கள் என்று கூறி மார்பை தொட்டுப்பார்த்துக் கூறுங்கள் என்கிறார். மேலும் 70 வயது முதியவர்தானே என்று உள்ளுக்குள் சமாதானம் வேறு அடைகிறார்.

அந்த முதியவர் மார்பை இருபுறமும் நன்றாக பதம் பார்த்துவிட்டு கடைசியில் உங்கள் வயது சரியாக 47 என்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், ஆர்வ மிகுதியால் இது மிகப்பெரிய ஒரு விஷயம்தான் எப்படி அவ்வளவு சரியாக என் வயதைக் கண்டுபிடித்தீர்கள் என்கிறார்.
அதற்கு அந்த முதியவர்: மெக்டொனால்ட் உணவகத்தில் அந்த ஊழியரிடம் நீங்கள் உங்கள் வயதைக்கூறும்போது நான் பின்னால் நின்று கொண்டிருந்தேன் என்றாரே பார்க்கலாம்!